Published : 11,Apr 2019 10:17 AM
“பல இடங்களில் நான் பேச தடைவிதிக்கப்பட்டுள்ளது” - கமல்ஹாசன் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் பல இடங்களில் எனக்கு பேச அனுமதி தரவில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டினார்.
கடலூர் உழவர் சந்தையில் மக்களவை வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “எனக்கு நடிப்பு தெரிந்தால் கண்களால் பேசிவாக்கு சேகரிக்கிறேன். இதனை மக்களும் புரிந்துகொள்கிறார்கள். முந்தைய ஆட்சியாளர்கள் விட்டு சென்ற பணிகளை உங்கள் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் செய்துகொடுப்பார். மீனவர்களுக்கு புயல் சமையத்தில் தாங்ககூடிய வீடுகள் கட்டித்தரப்படும். தேர்தல் ஆணையம் பல தெருக்களில் எனக்கு அனுமதி மறுத்துள்ளது. பல இடங்களில் பேச தடைவிதித்துள்ளது.
காவல்துறை ஏவல் துறையாக செயல்படகூடாது. காவல்துறையை காவல்துறையாகவே செயல்பட வைப்பது அரசின் கடமை. காவல்துறை வாக்களிக்கும்போது தொப்பியை கழட்டி வைத்து, சிந்தித்து வாக்களிக்கவேண்டும்” என்று வேண்டுகோள் வைத்தார். முதல்முறை தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம், இம்முறை வாக்குகளை பிரிக்குமா ? மாற்றத்தை உருவாக்குமா ? என்பதை பொருந்திருந்துதான் பார்க்க வேண்டும்.