[X] Close

“13 பேர் இறந்ததற்கு மோடி இரங்கல் தெரிவித்தாரா?” - ஸ்டாலின் கேள்வி

Still-Modi-don-t-sadi-Sadness-for-Tuticorin-13-Dies---MK-Stalin

தூத்துக்குடியில் கருணாநிதியே போட்டியிடுகிறார் என நினைத்து கனிமொழிக்கு வாக்களிக்கவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.


Advertisement

நாடாளுமன்றத் தேர்தல் வரும் 18ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பல பிரபலங்கள் நேருக்கு நேர் மோதுகின்றனர். அந்த வகையில் திமுக எம்பி கனிமொழியும், பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனும் மோதும் தொகுதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. கட்சிகள் என்பதை தாண்டி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தனின் மகள் மோதுகின்றார்கள் என்ற பேச்சு தூத்துக்குடியில் நிலவுகிறது. இதனால் அங்கு அனல் பறக்கும் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது.


Advertisement

இந்நிலையில் கனிமொழியையும், விளாத்திக்குளம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஜெயக்குமாரையும் ஆதரித்து தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசினார். அப்போது வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய ஸ்டாலின், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் இறந்துபோனதற்கு பிரதமர் மோடி இதுவரை‌ இரங்கல் தெரிவித்தாரா? எனக் கேள்வி எழுப்பினார். 

வாய் திறக்காத மோடியை ஃபாஸிஸ்ட் எனக் கூறுவதில் என்ன தவறு? எனவும் வினவினார். அத்துடன், திமுக ஆட்சிக்கு வந்தால் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கொள்கை முடிவு எடுக்கப்படும் எனவும் ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பேசினார். மேலும் கனிமொழியை திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதியாக நினைத்துக்கொண்டு வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.


Advertisement

Advertisement
[X] Close