தேர்தலில் பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மை பெறாமல் கூட்டணி ஆட்சி வரும் நிலை ஏற்பட்டால் தன்னையோ அல்லது நிதின் கட்கரியையோ கட்சி பிரதமராக அறிவிக்கும் என்ற தகவலை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுத்துள்ளார்
கற்பனையான சூழலின் அடிப்படையில் இது போன்ற தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டினார். தேர்தலில் பாரதிய ஜனதா 3ல் 2 பங்கு இடங்களில் வென்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த விரிவான பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சியில் மோடி மற்றும் அமித் ஷா ஆகிய இருவரையே பிரதானமாக கொண்ட கட்சி என குற்றஞ்சாட்டப்படுவதையும் ராஜ்நாத் மறுத்தார். கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடப்படும் என மோடி ஒரு போதும் கூறவில்லை என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனைக்கு அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை எனவும் அந்தந்த அமைப்பினருக்கு கிடைத்த தகவல்கள் அடிப்படையிலேயே அச்சோதனைகள் நடத்தப்படுவதாகவும் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்
Loading More post
'விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்; அதை கேட்க நீங்கள் யார்?' - சித்தராமையா ஆவேசம்
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்