[X] Close

திமுகவில் இணைய இருந்த முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் சோதனை

Income-Tax-raid-in-Former-ADMK-MLA-house-in-Cuddalore

கடலூரில் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைய இருந்த முன்னாள் எம்எல்ஏ ஐயப்பனின் வீட்டில் ‌வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


Advertisement

கடலூர் சட்டமன்றத் தொகுதியில் 2006 முதல் 2011 வரை திமுக எம்எல்ஏவாக இருந்தவர் ஐயப்பன்‌‌. பின்னர் அதிமுகவில் இணைந்த அவர், அந்தக் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட அவைத்தலைவராக இருந்தார். இந்நிலையில், அமைச்சர் எம்சி சம்பத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிருப்தியில் இருந்த ஐய்யப்பன்‌, அதிமுகவில் தான் வகித்து பதவியை ராஜினாமா செய்தார். 


Advertisement

நேற்று சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்த அவர், வியாழனன்று கடலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையத் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் ‌கடலூர் செம்மண்டலத்தில் உள்ள ஐயப்பனின் வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேரம் நீடித்த சோதனையின் கார‌ணமாக அங்கு 20-க்கும் அதிகமான போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆனால், இந்தச் சோதனையில் பணமோ, ஆவணங்களோ கைப்பற்றப்படவில்லை.


Advertisement

Advertisement
[X] Close