[X] Close

இரட்டை இலை சின்னத்துக்கான லஞ்சப் புகார்: டிடிவி.தினகரன் கைது

Dhinakaran-Arrest

இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் டிடிவி.தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

தொடர்ந்து 4வது நாளாக நேற்று மாலை 5 மணிக்கு டெல்லி காவல்துறையிடம் டிடிவி.தினகரன் ஆஜரானார். சுமார் 7 மணி நேரம் விசாரணை நீடித்த நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார். அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

டிடிவி.தினகரனின் உதவியார் ஜனார்த்தனனிடம் விசாரணை நடத்தப்பட்டாலும், அவர் கைது செய்யப்படவில்லை. தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கடந்த 16ம் தேதி கைது செய்யப்பட்டார்.


Advertisement

அதுதொடர்பாக, டிடிவி.தினகரனிடம் கடந்த சனிக்கிழமை முதல் தொடர்ந்து 4 நாட்கள் சுமார் 37 மணி நேரம் டெல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அவர் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

முன்னதாக ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளவு பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதில் சிக்கல் ஏற்பட்டது. சசிகலா அணி, ஓபிஎஸ் அணி ஆகிய இரு அணிகளும் கட்சியின் சின்னத்திற்கு உரிமை கோரின. இதனால் இரட்டை இலை சின்னம், கட்சி பெயரை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை மீட்க சசிகலா தரப்பு தீவிர முயற்சி செய்தது.

இதனிடையே கடந்த 17ஆம் தேதி பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1.30 கோடி ரொக்கப்பணத்தைக் கைப்பற்றினர். இதையடுத்து, போலீசாரின் விசாரணையில் இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணிக்கு ஒதுக்க வேண்டும் என்பதற்காக, ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், அதில் முன் பணமாக ரூ.1.30 கோடியை டிடிவி தினகரன் கொடுத்ததாகவும் சுகேஷ் சந்திரசேகர் போலீசில் வாக்குமூலம் அளித்தார். இதனால், டிடிவி தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதன் பின்னர் டிடிவி.தினகரனுக்கு சம்மன் அனுப்பிய டெல்லி போலீசார் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். அதன்பேரில் டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் முன்பு கடந்த சனிக்கிழமை தினகரன் ஆஜரானார். அவரிடம் நான்கு நாட்களாக விசாரணை மேற்கொண்ட டெல்லி போலீசார் அவரை நள்ளிரவு 12 மணிக்கு கைது செய்துள்ளனர்.


Advertisement
Related Tags : Dhinakaran Arrestarrest dhinakaran

Advertisement

Advertisement
[X] Close