Published : 07,Apr 2019 05:46 AM

ம.பி. முதல்வரின் செயலாளர்‌ வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

Income-Tax-Officers-Raid-Homes-Of-Kamal-Nath-s-Aides-In-Delhi-And-Indore

மத்தியப்பிரதேச முதல்வர் கமல்நாத்தின் செயலாளர் ‌வீடு உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியுள்ளது.

மத்தியப் பிரதேசம், டெல்லி, கோவா உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வருமானவரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் இந்தூரின் விஜயநகர் என்ற பகுதியில் இருக்கும் மத்தியப் பிரதேச முத‌‌ல்வர் கமல்நாத்தின் செயலாளர் பிரவீன் க‌கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் முதல்வரின் நெருங்கிய கணக்கர் பிரதிக் ஜோஷி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல சூட்கேசில் இருந்த கட்டுக்கட்டாக பணத்தை வருவமானவரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தேர்தலையொட்டி போபால், இந்தூர், கோவா மற்றும் டெல்லியில் உள்ள 35‌ பகுதிகளில் வருமானவரித்துறையினர் அதிகாலை‌ மூன்று மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்