[X] Close

விடுமுறைக்கு வந்த ராணுவ வீரர் சுட்டுக்கொலை: பயங்கரவாதிகள் கொடூரம்

Soldier-on-leave-at-home-killed-in-Sopore

விடுமுறையில் வந்த காஷ்மீர் ராணுவ வீரரை, வீட்டின் அருகே பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள வார்போரா பகுதியில் வசிப்பவர் குலாம் முகைதின் யாட்டூ. இவர் மகன், முகமது ரபி யாட்டூ. இந்திய ராணுவ வீரரான இவர், ஜக்ளி ரெஜிமண்டில் பணியாற்றினார். விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்தார் முகமது ரபி. நேற்று அருகில் உள்ள மசூதியில், நமாஸ் செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினார்.


Advertisement

அப்போது அந்தப் பகுதியில் துப்பாக்கியுடன் மறைந்திருந்த பயங்கரவாதிகள், முகமது ரபியை சரமாரியாகச் சுட்டுவிட்டு தப்பிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ராணுவ வீரர் இறந்ததையடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close