சேலம்-சென்னை இடையேயான எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான வழக்குகளில் நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
சென்னை - சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையப்படுத்துவதை எதிர்த்து ‘பூ உலகின் நண்பர்கள்’, நில உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்குகள் மீதான விசாரணை டி.எஸ் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் நடைபெற்று வந்தது.
மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்த பின்னர்தான் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் எனவும், தற்போது நில அளவீடு பணி மட்டுமே நடைபெற்று வருவதாகவும் மத்திய அரசு சார்பில் கூறப்பட்டது. அனுமதி கிடைத்த பின்னர்தான் முழுமையாக நிலம் கையகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி வாதங்களை கேட்ட நீதிபதிகள் அனைத்து வழக்குகளிலும் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இந்நிலையில் வரும் திங்கள் கிழமையன்று எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான வழக்குகளை முதல் வழக்காக எடுத்து நீதிபதிகள் தீர்ப்பளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
மும்பையை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்