வடக்கு மகாராஷ்டிராவில் நடைபெற்ற இரண்டு விவசாய போராட்டங்கள் இந்திய நாட்டையே உலுக்கின. ஒன்று; விவசாயிகள் தங்களின் கேன்களிலிருந்து பாலை தெருவில் கொட்டிய நடத்திய போராட்டம். மற்றொன்று விவசாயிகள் பேரணியாக மும்பையை நோக்கி நடந்து சென்றது. அதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு மகாராஷ்டிரா பகுதியை கைப்பற்ற போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வடக்கு மும்பை பகுதியில் மொத்தம் 6 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. டிண்டோரி, நந்தூர்பார், ராவர், நாசிக், தூலே, ஜால்கான் ஆகிய தொகுதிகள்தான் அவை. இந்தத் தொகுதிகளில் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 5 இடங்களில் பாஜகவும் ஒரு இடத்திலும் சிவசேனா கட்சியும் ஒரு இடத்திலும் வென்றிருந்தது. மகாராஷ்டிராவில் தற்போது பாஜகவின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. தேவேந்திர பட்னாவிஸ் தலைமயிலான அரசு விவசாய கடன்கள் ஆகியவற்றை ரத்து செய்திருந்தாலும் அது விவசாயிகளிடையே அதிக வரவேற்பை பெறவில்லை.
வடக்கு மகாராஷ்டிரா பகுதியில் தற்போது இருக்கும் முக்கிய பிரச்னைகள் விவசாயிகளின் வறுமை நிலை, வறட்சி, பழங்குடியினர் இடையே நிலவும் மோதல்கள். இப்பகுதியிலுள்ள 5 மாவட்டங்களும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தத் தொகுதிகளில் சாதிவாரியான வாக்கு வங்கிகள் முடிவை தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மராத்தா சமூகத்தினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூத்தினரின் வாக்குகள் தேர்தல் முடிவை தீர்மானிக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
எனினும் காங்கிரஸ் கட்சி நந்தூர்பார் தொகுதியில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்தத் தொகுதியில் 2014ஆம் ஆண்டு தேர்தலில் மட்டும்தான் அக்கட்சி தோல்வியடைந்துள்ளது. அதேபோல டிண்டோரி மற்றும் நாசிக் தொகுதிகளில் தேசியவாத காங்கிரஸ் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
Loading More post
‘பிரதமர் ரணில் கோரிக்கையை புலம்பெயர் தமிழ் உறவுகள் ஏற்கக் கூடாது’ - கஜேந்திரகுமார் எம்பி
பூந்தமல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை
’சூர்யா 41’ கைவிடப்படுகிறதா? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது சூர்யாவின் அப்டேட்!
சட்டவிரோத விசா வழக்கு - மே 30ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை
மீண்டும் மூடுவிழா காண்கிறது சாண்ட்ரோ
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!