மாருதி சுசூகி ஆம்னி வேன் கார் தயாரிப்பு நிறுத்தம்

மாருதி சுசூகி ஆம்னி வேன் கார் தயாரிப்பு நிறுத்தம்
மாருதி சுசூகி ஆம்னி வேன் கார் தயாரிப்பு நிறுத்தம்

இந்திய வாகனச் சந்தையில் கடந்த 35 ஆண்டுகளாக தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருந்த மாருதி ஆம்னியின் தயாரிப்பு நிறுத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

மாருதியின் முதல் 800 கார் 1984 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. கால் டாக்ஸி, சரக்கு வாகனம், குடும்பத்திற்கான வாகனம் என மாருதி பல வருடங்களாகப் பல பரிணாமங்களில் பிரபலமான வாகனமாக இருந்து வருகிறது. ஆனால் வாகனங்களுக்கான புதிய பாதுகாப்பு தர மதிப்பீடுகள் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது. அவற்றை மாருதி ஆம்னி பூர்த்தி செய்ய இயலாது என்பதால் அதன் தயாரிப்பை நிறுத்தும் முடிவுக்கு மாருதி சுசூகி நிறுவனம் வந்துள்ளதாக தெரிகிறது.

அறிமுகமானதிலிருந்து இன்று வரை அதே 800 cc இன்ஜின்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அதன் வெளித் தோற்றத்திலும் பெரிதாக மாறுதல்கள் செய்யப்படவில்லை. இன்றைக்கும் கூட இதற்குச் சந்தையில் வரவேற்பு இருக்கிறது. மேலும் கணிசமான அளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. 

கடந்த ஜனவரி மாதம் மூன்றாம் தலைமுறை மாருதி சுசூகி வேகன் ஆர்-ன் 2019 ஆண்டு கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மாருதி சுசூகி வேகன் ஆர் கார்களின் விலை 4.49 லட்ச ரூபாயில் துவங்கி, 5.69 லட்ச ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டது. பாதுகாப்பு வசதிகளாக டிரைவர் ஏர்பேக், முன்புற சீட் பெல்ட் ரீமைண்டர், ஸ்பீட் அலர்ட் சிஸ்டம் மற்றும் ரியர் பார்கிங் சென்சார் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com