Published : 04,Apr 2019 04:33 AM
இந்திய ராணுவம் மோடியின் படையா ? உ.பி.முதல்வருக்கு நோட்டீஸ்

இந்திய ராணுவம் மோடியின் படை என்று கூறியது குறித்து விளக்கமளிக்குமாறு, உத்தரப்பிரதேச முதமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காசியாபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் ராணுவத் தளபதி வி.கே.சிங்கை ஆதரித்து ஏப்ரல் ஒன்றாம் தேதி நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் உரையாற்றினார். அப்போது, புல்வாமா தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததை சுட்டிக்காட்டிப் பேசிய யோகி ஆதித்யநாத், மோடியின் படை என்று குறிப்பிட்டார். அவரது இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய இந்தப் பேச்சு தேர்தல் நடத்தை விதிகளை மீறியது என்றும், இதுகுறித்து இன்று மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் யோகி ஆதித்யநாத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.