[X] Close

’ஓபனிங்லாம் நல்லாதான் இருந்துச்சு. ஆனா...’ தோல்வி பற்றி தோனி!

I-think-quite-a-few-things-went-wrong-for-us--MS-Dhoni

ஐபிஎல் தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்தது. முதலில் ஆடிய மும்பை இண்டியன்ஸ், 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் 59 ரன்னும் குணால் பாண்ட்யா 42 ரன்னும் எடுத்தனர். பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. கேதர் ஜாதவ் 58 ரன் எடுத்தார்.


Advertisement

தோல்விக்குப் பின் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, ’’எங்களின் தொடக்கம் சரியாக இருந்தது. நாங்கள் பந்துவீசும் போது, முதல் 10-12 ஓவர் வரை சரியாகவே சென்றது. அடுத்து சில கேட்ச்-களை கோட்டை விட்டோம். ஃபீல்டிங்கில் சொதப்பினோம். பிறகு கடைசி கட்ட ஓவர் களில் சரியாகp பந்துவீசாமல் ரன்களை அள்ளிக் கொடுத்தோம். இதனால் தோல்வி அடைய நேர்ந்தது.


Advertisement

எங்கள் திட்டங்களைச் சரியாக செயல்படுத்த முடியவில்லை. எந்த பேட்ஸ்மேனை டார்க்கெட் பண்ண வேண்டும், பவுண்டரிகள் செல்வதை எப்படி குறைக்க வேண்டும், ரன்கள் அதிகம் கொடுப்பதை எப்படி குறைக்க வேண்டும் என்பதை பந்துவீச்சாளர்கள் தெரிந்திருக்க வேண்டும்.


Advertisement

எங்கள் அணியில் சில வீரர்கள் இணையவில்லை. இப்போது பிராவோவும், காயமடைந்துள்ளார். ஏற்கனவே சில வீரர்கள் காயத்தால் விலகிவிட்டனர். டேவிட் வில்லே சொந்த காரணமாகவும், லுங்கி நிகிடி காயம் காரணமாகவும் அணியில் இடம்பெறவில்லை. அடுத்தப் போட்டியின்போது பிட்ச் தன்மையை பொறுத்து அணியில் சில மாற்றங்கள் இருக்கும்’’ என்றார். 


Advertisement

Advertisement
[X] Close