சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 170 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 15வது போட்டி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் களமிறங்கிய மும்பை அணியில், தொடக்க ஆட்டக்காரரான டி காக் 4 (7) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றம் அளித்தார். அவரைத் தொடர்ந்து ஜடேஜா வீசிய பந்தில் ரோகித் ஷர்மா 13 (18) ரன்கள் எடுத்திருந்தபோது தோனியிடம் கேட்ச் ஆனார்.
அதன்பிறகு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் நிலைத்து விளையாடினார். இதற்கிடையே வந்த யுவராஜ் சிங் வந்த வேகத்தில் 4 (6) மட்டுமே எடுத்து நடையை கட்டினார். பின்னர் வந்த குருனல் பாண்ட்யா சூர்யகுமாருடன் சேர்ந்து மும்பை அணியை சரிவில் இருந்து மீட்டார். மும்பையின் ஸ்கோர் 112 ரன்கள் இருந்தபோது குருனல் பாண்ட்யா 42 (32) ரன்களில் வெளியேறினார். அரை சதம் அடித்த சூர்யகுமார் 59 (43) ரன்களில் அவுட் ஆனார்.
பின்னர் வந்த ஹர்திக் பாண்ட்யா மற்றும் கிரான் பொல்லார்ட் சில சிக்ஸர்கள் அடித்து மும்பை ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 170 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்ட்யா 25 (8) ரன்களுடனும், பொல்லார்ட் 17 (7) ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்கவில்லை.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்