டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய விவசாயிகள், தென்னிந்திய நதிகள் இணைப்புக்கான விவசாயிகள் சங்கத்தின் தலைவர்அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் டெல்லியில் 41 நாட்களாக போராட்டத்தில்ஈடுபட்டு வந்தனர்.
அவர்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். கோரிக்கைகள் குறித்து ஆவண செய்யப்படும் என்று கூறியதை அடுத்து, அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு சென்னை திரும்பினர். இன்று காலை அவர்கள் சென்னைவந்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக நடத்தும் போராட்டத்தில் அவர்களும் கலந்துகொண்டனர். சென்ட்ரல் ரயில் நிலையம்அருகில் போராட்டத்தை தொடங்கினர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, ‘எங்கள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் மே 25-ம் தேதி முதல்
டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும். டெல்லியில் தமிழக விவசாயிகள் மிரட்டப்பட்டனர். விவசாயிகளின் கோரிக்கைகளைநிறைவேற்றும் பொறுப்பு மாநில அரசுகளுக்கே உள்ளது என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியிருப்பது மக்களை ஏமாற்றும் செயல்’என்று அவர் தெரிவித்தார்.
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!