[X] Close

ரூ.15 கோடி மதிப்பிலான 47 கிலோ தங்கம் பறிமுதல்

47-Kg-gold-jwells-are-seized-in-Madurai

மதுரையில் முறையான ஆவணமின்றி வேனில் கொண்டுசென்ற 47 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும்படையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடக்கும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்குகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் தொடங்கி தேர்தல் பறக்கும்படையினர், நாடு முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இந்நிலையில் மதுரையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான 47 கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மதுரை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அய்யர்பங்களா பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை தீவிர ‌வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மதுரையிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற வாகனத்தை சோதனையிட்டனர். அதில், உ‌ரிய ஆவணங்களின்றி 47 கிலோ தங்கம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.


Advertisement

மதுரையில் 47 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

இதனையடுத்து 47 கிலோ தங்கத்தையும் பறிமுதல் செய்த பறக்கும்படை அதிகாரிகள் ஆட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு சென்றனர். தொடர்ந்து உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்தால் தங்க நகைகள் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close