[X] Close

திமுக - காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகளில் உள்ள பொதுவான அம்சங்கள்

dmk-congress-alliance-general-election-statement

த‌மிழகத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் உள்ள பொதுவான அம்சங்களைப் பார்க்கலாம்.


Advertisement

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்துள்ள நிலையில், பள்ளிக் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதுடன் உயர்கல்வி தொடர்ந்து மத்திய அரசின் வசமிருக்கும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

கல்விக் கடன்கள் முற்றிலும் ரத்து செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கை கூறும் நிலையில், கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் வேலையில் சேரும் வரை வட்டி வசூலிக்கப்படாது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும் என்பதை திமுகவும், காங்கிரசும் வாக்குறுதியாக அளித்திருக்கின்றன. 

பெட்ரோல், டீசல், சிலிண்டர் ஆகியவற்றின் விலையைக் கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்கப்‌டும் என திமுக கூறியுள்ள நிலையில், இவை ஜிஎஸ்டியில் சேர்க்கப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதியும் திமுக, காங்கிரஸ் இரண்டு தேர்தல் அறிக்கைகளிலும் இடம்பெற்றுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close