[X] Close

ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

RR-skipper-Ajinkya-Rahane-fined-Rs-12-lakh

சென்னை அணிக்கு எதிரான போட்டியின்போது, பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று மோதின. முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தோனியின் சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. தோனி, 46 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். 


Advertisement

அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து தோல்வியைத் தழுவி யது. அந்த அணி தொடர்ந்து 3 போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது. அடுத்து பெங்களூரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. 

இந்நிலையில் நேற்றைய போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக, ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.


Advertisement

Advertisement
[X] Close