ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி45 ராக்கெட்டை ஏவியது இஸ்ரோ. இந்த ஆண்டில் இஸ்ரோ அனுப்பிய 2-வது ராக்கெட் இதுவே ஆகும்.
உலகிலேயே முதன்முறையாக வெவ்வேறு புவி வட்டப்பாதைகளில் 3 செயற்கைக்கோள்கள் நிறுத்தப்படவுள்ளன. நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சிக்கு உதவும் எமிசாட் மற்றும் வணிக ரீதியாக வெளிநாடுகளின் 28 செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி-சி45 மூலம் காலை 9.30 மணியளவில் விண்ணில் பாய்ந்தது.இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட மினி செயற்கைக்கோளான 'எமிசாட்' பி.எஸ்.எல்.வி-சி45 மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பயன்பாட்டுக்கு இந்த செயற்கைக்கோள் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், அமெரிக்காவின் 24 செயற்கைக்கோள்கள், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒரு செயற்கைக்கோள் மற்றும் லுதுவேனியாவை சேர்ந்த 2 செயற்கைக்கோள்கள் என 4 நாடுகளை சேர்ந்த 28 செயற்கைக்கோள்கள் வணிக ரீதியாக விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோ மூலம் முதல்முறையாக ஒரே ராக்கெட்டில் 3 செயற்கைக்கோள்கள் வெவ்வேறு புவி சுற்றுவட்டப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 71-வது ராக்கெட் இதுவாகும். பி.எஸ்.எல்.வி.-க்யூஎல் வகையில் விண்ணில் பாயும் முதல் ராக்கெட் இதுவாகும். இந்த செயற்கைக்கோள் இந்திய ஆராய்ச்சி நிறுவனங்கள், நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சிக்கு பயன்படும் வகையில் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. எமிசாட் செயற்கைக்கோள் மூலம் மின்காந்தஅலைக்கற்றைகளை கண்காணிக்க முடியும்.
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!