அது என்ன வாக்கு ஒப்புகை சீட்டு முறை? வாக்குகள் சரிபார்ப்பது எப்படி?

அது என்ன வாக்கு ஒப்புகை சீட்டு முறை? வாக்குகள் சரிபார்ப்பது எப்படி?

அது என்ன வாக்கு ஒப்புகை சீட்டு முறை? வாக்குகள் சரிபார்ப்பது எப்படி?

இந்தியாவில் பொதுவாக தேர்தல் நடைபெறும் காலங்களில் தேர்தல் முறை குறித்து சர்ச்சைகள் எழும்பும். அதேபோன்று தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் வாக்கு ஒப்புகை சீட்டு மூலம் தேர்தல் முடிவை சரிபார்ப்பது குறித்து புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அதனால், தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்கு ஒப்புகை சீட்டு முறை குறித்தும் அதன் பயன்பாடு குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது. 

வாக்கு ஒப்புகை சீட்டு முறை (விவிபேட்) என்றால் என்ன?

வாக்கு ஒப்புகை சீட்டு முறை மூலம் வாக்காளர்கள் தாங்கள் அளித்த வாக்கு குறித்து தெரிந்துகொள்ளலாம். அதாவது வாக்காளர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்தப்பிறகு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டுள்ள விவிபேட்டில் வாக்கின் விவரம் தெரியும். அதில் வேட்பாளரின் பெயர் மற்றும் அவரது சின்னம் ஆகிய இரண்டும் 7 விநாடிகளுக்கு விவிபட் திறையில் தெரியும். அதன்பின்பு இந்தத் தகவல் வாக்கு ஒப்புகை சீட்டாக அச்சிட்டு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள பெட்டிக்குள் விழுந்துவிடும். இந்த ஒப்புகை சீட்டு உள்ள பெட்டியை தேர்தல் நடத்தும் அதிகாரி மட்டுமே திறக்கமுடியும்.


வாக்கு ஒப்புகை சீட்டு ஏன்?

1998 ஆண்டில் சோதனை முயற்சியாக மூன்று மாநில தேர்தலில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உபயோகப்படுத்தப்பட்டன. அதன்பின் 1999ஆம் ஆண்டு கோவா மாநில தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உபயோகப்படுத்தப்பட்டன. இதற்கு பிறகு 2000 ஆம் ஆண்டு முதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்து தேர்தகளிலும் பயன்படுத்தப்பட்டன. எனினும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்தனர். அதன் தொழில்நுட்பத்தில் சதி செய்து தேர்தல் முடிவுகள் மாற்றப்படுகின்றன என புகார் தெரிவித்துவந்தனர். 

இதனை தேர்தல் ஆணையம் மறுத்து பல விளக்கங்களையும் அளித்து வந்தது. அத்துடன் பல சீர்திருத்ததையும் மேற்கொண்டு வந்தது. அவ்வாறு வாக்களித்த விவரங்களை சரிபார்த்துகொள்ள அறிமுகப் படுத்தப்பட்ட முறைதான் விவிபேட் எனும் வாக்கு ஒப்புகை சீட்டு. இதனை தேர்தல் ஆணையம் 2013 ஆம் ஆண்டு முதல் சோதனை முறையில் அமல்படுத்தியது. அந்தவகையில் 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இந்த முறை 8 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்டது. அதற்கு பிறகு 2017 கோவா சட்டப்பேரவை தேர்தலில் மாநிலம் முழுவதும் விவிபேட் பயன்படுத்தப்பட்டது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவது உள்ள 10.5 லட்சம் வாக்கு சாவடிகளிலும் வாக்கு ஒப்புகை சீட்டு பயன்படுத்தவுள்ளது.

வாக்கு ஒப்புகை சீட்டு முறை மூலம் வாக்குகள் சரிபார்க்கும் முறை?

தேர்தல் ஆணைய விதிப்படி தற்போது வாக்கு ஒப்புகை சீட்டு மூலம் பதிவான வாக்குகள் ஒரு நாடாளுமன்ற அல்லது சட்டமன்றத் தொகுதியிலுள்ள ஏதாவது ஒரு வாக்குச் சாவடியில் மட்டும் சரிபார்க்கப்படும். இவ்வாறு சரிபார்த்தால் தொராயமாக 0.5% வாக்குப் பதிவு இயந்திரங்களின் முடிவுகளை ஒப்பிட்டு பார்க்க முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இவ்வாறு ஒரு வாக்குசாவடியில் மட்டும் வாக்கு ஒப்புகை சீட்டை சரிபார்ப்பது குறித்து அரசியல் கட்சிகள் அதிருப்தி தெரிவித்துவந்தனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். அந்த வழக்கில் கட்சிகள் 50% தொகுதிகளில் வாக்கு ஒப்புகை சீட்டு முறை மூலம் வாக்குகள் சரிபார்க்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தனர். இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம் 50% தொகுதிகளில் வாக்குகளை சரிபார்த்தால் தேர்தல் முடிவு அறிவிக்க 6 நாட்கள் தாமதம் ஆகும் எனக் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com