பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் செய்த மன்கட் அவுட் முறையை, கொல்கத்தா போக்குவரத்து போலீஸ் விளம்பரத்துக்கு பயன்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையேயான போட்டி, ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது, அஸ்வின் செய்த 'மன்கட்' முறை அவுட். சமூக வலை தளங்களில் இது பெரிய விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
விதிப்படி சரியாக இருந்தாலும் இந்த முறையில் அவுட் செய்வது சரியாகாது என்றும் விதியே சரி எனும்போது தவறில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது விவாதங்கள்.
இந்நிலையில் இந்த அவுட் முறையை தங்களது போக்குவரத்து விதிமீறல் எச்சரிக்கைக்குப் பயன்படுத்தி இருக்கிறது கொல்கத்தா போக்குவரத்துக் காவல்துறை. அஸ்வின் அவுட் செய்யும் புகைப்படத்துடன் போக்குவரத்து லைனை தாண்டும் கார் ஒன்றின்
புகைப்படத்தையும் இணைத்து, ‘ஆடுகளமோ, சாலையோ... எல்லை தாண்டினால் வருத்தப்படுவீர்கள்’ என்ற வாசகத்துடன் கொல்கத்தா போக் குவரத்து காவல்துறை ட்விட் செய்துள்ளது. இது அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
Loading More post
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு
‘பணிகளில் சுணக்கம் காட்டாதீர்கள்’-கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அட்வைஸ்
பேத்தியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு - உத்தராகண்ட் முன்னாள் அமைச்சர் தற்கொலை
முதல்வரின் திடீர் கள ஆய்வு எதிரொலி: அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தலைமைச் செயலாளர்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!