சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து வேகப்பந்துவீச்சாளர் டேவிட் வில்லே விலகியுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் டேவிட் வில்லே. ஆல்ரவுண்டரான இவர், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கிறார். இவர் மனைவி கரோலின் கர்ப்பமாக உள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக அவர் இருப்பதால், அவருடன் இருக்க டேவிட் வில்லே முடிவு செய்துள்ளார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவர் இடம்பெறவில்லை. இதை,சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கிடம் அவர் தெரிவித் துள்ளார்.
‘நாங்கள் எங்கள் இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்திருக்கிறோம். இந்த நேரத்தில் என் மனைவியுடன் இருக்க முடிவு செய்துள்ளேன். ஐபிஎல்- தொடரில் இருந்து விலகுவது என்பது எளிதான முடிவு அல்ல. இருந்தாலும் குடும்பதான் முக்கியம் என்ற நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளேன்’’ என்று வில்லே தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் நிகிடி, ஏற்கனவே காயம் காரணமாக சிஎஸ்கே அணியில் இருந்து விலகியுள்ள நிலையில், இவரும் விலகி இருப்பது பின்னடைவு என்று கூறப்படுகிறது.
Loading More post
‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு
‘பணிகளில் சுணக்கம் காட்டாதீர்கள்’-கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அட்வைஸ்
பேத்தியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு - உத்தராகண்ட் முன்னாள் அமைச்சர் தற்கொலை
முதல்வரின் திடீர் கள ஆய்வு எதிரொலி: அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தலைமைச் செயலாளர்
பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதா? அண்ணாமலைக்கு வலுக்கும் கண்டனம்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!