[X] Close

''பிஎம் மோடி திரைப்படம் விதிகளை மீறவில்லை'' - படக்குழு விளக்கம்

Modi-Movie-was-not-over-in-Election-Rule---Movie-Team

பிரதமர் மோடியின் பெயரால் எடுக்கப்பட்ட திரைப்படம் தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் இல்லை என அப்படக்குழுவினர் தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளனர்.


Advertisement

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சமூக வலைத்தளங்கள், விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்கள் உள்ளிட்டவைகளும் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளன. 

இந்நிலையில் பிஎம் நரேந்திர மோடி என்ற பெயரிலான திரைப்படம் வரும் 5ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. மோடியின் வாழ்க்கை வரலாற்று படம் வெளியாவது, தேர்தல் நடத்தை விதிமீறல் எனத் தேர்தல் ஆணையத்தில் புகார்கள் கூறப்பட்டன. 


Advertisement

இதைத் தொடர்ந்து படம் குறி‌த்து விளக்கம் தர படக்குழுவினருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து படத்தில் மோடியாக நடித்த நடிகர் விவேக் ஓபராயும், தயாரிப்பாளர் சந்தீப் சிங்கும் தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளனர். தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து இவ்விளக்கத்தை அளித்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் படம் வெளியிடுவது‌ குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் முடிவெடுக்க உள்ளனர். 


Advertisement

Advertisement
[X] Close