Published : 28,Mar 2019 11:27 AM

சொத்து தகராறில் தந்தையை அரிவாளால் வெட்டிக்கொன்ற மகன்

Son-Killed-Father-for-Properties-in-Palani

பழனியில் சொத்து தகராறு காரணமாக மகனே தந்தையை வெட்டிக் கொன்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ராஜாஜி சாலையில் குடியிருந்து வந்தவர் மாரிமுத்து. இவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். தந்தை மாரிமுத்து சொத்து தரவில்லை எனக் கூறி மகன் மணிகண்டன் அவ்வப்போது சண்டையிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை தந்தை மாரிமுத்து வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். 

அப்போது சொத்து தராத காரணத்தினால் மகன் மணிகண்டன், தந்தை மாரிமுத்துவை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். அதில் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து அவர் உயிரிழந்தார். உடனே அங்கிருந்து தப்பிக்க முயன்ற மணிகண்டனை அப்பகுதி மக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி, பழனி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாரிமுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அத்துடன் மணிகண்டனிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்