சென்னையில் தனியாக செல்லும் முதியவர்களிடம் காவல்துறையினர் போல நடித்து நூதன முறையில் பணம் மற்றும் தங்க நகையை பறிக்கும் கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை முகப்பேர் கிழக்கு கோல்டன் காலனியைச் சேர்ந்தவர் கணபதி (57). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகை செல்வதற்காக இரவு நேரத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கணபதியுடன் பேச்சு கொடுத்தார்.இந்த சூழலில் திடீரென அங்கு வந்த 2 மர்ம நபர்கள் தங்களை போலீஸ் என்று கூறி கொண்டு கணபதியை மிரட்ட தொடங்கியுள்ளனர். மேலும் "பெண்ணிடம் ஈவ்டீசிங் செய்கிறாயா? கைது செய்யப்போறோம்" என்று கூறி அவரை மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.
இதனையடுத்து அதிர்ச்சியடைந்த கணபதி, தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனைதொடர்ந்து கணபதியை மிரட்டி தனியாக அழைத்து கொண்டு ஏடிஎம் சென்றுள்ளனர். பின் அந்த மர்ம கும்பல் அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் பறித்துள்ளனர். மேலும், திருமங்கலம் பகுதிக்கு கணபதியை அழைத்து சென்று, அங்குள்ள நகைக்கடையில் 4 கிராம் உடைய 2 தங்க நாணயங்களை வாங்கி, அதனை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த கணபதி செய்வதறியாத தவித்துள்ளார்.
இந்நிலையில் கணபதி, இச்சம்பவம் குறித்து நேற்று கோயம்பேடு காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக கணபதியை அழைத்துச் சென்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக கணபதியிடம் தகவல்களை கேட்டபோது அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?