தமிழகத்தில் உள்ள 3 அரசு மருத்துவமனைகளில் ஜனவரிக்குள்ளான கடைசி 4 மாதங்களில் கிட்டத்தட்ட 15 கர்ப்பிணி பெண்கள் ரத்த பக்கவிளைவுகளால் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
கர்ப்பிணி பெண்களின் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது ரத்த வங்கி. அதாவது ரத்த வங்கியில் உள்ள சிதைந்து போன ரத்தத்தை பயன்படுத்தியதால் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் கர்ப்பிணிகள் இறந்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி,
தமிழகத்தில் உள்ள தருமபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய மருத்துவமனைகளில் சிதைந்த நிலையில் உள்ள ரத்தங்கள் ரத்த வங்கிகளில் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த மாநில சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் ரத்த வங்கிகளில் உள்ள ரத்தங்களை முறையாக பரிசோதனை செய்து சரியாக பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், பாதுகாப்பான ரத்தம் என்று மருத்துவர் சான்றிதழ் அளித்த பின்னரே அதனை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு எய்ட்ஸ் கிருமிகள் பாதிக்கப்பட்ட ரத்தத்தை மருத்துவர்கள் செலுத்தியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த ரத்தம் பாதுகாப்பானது என்று மருத்துவர்களால் சான்றிதழ் அளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி