துரைமங்கலம் பகுதியில் பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பு
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் துரைமங்கலம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர், பெரம்பலூர் தொகுதியில் இருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். இதையொட்டி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்த பாரிவேந்தர், மாலையில் துரைமங்கலம் பகுதியில் வீதி, வீதியாக சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
திறந்த வேனில் சென்றபடி முக்கிய இடங்களில் பரப்புரையில் ஈடுபட்ட பாரிவேந்தர், பெரம்பலூரில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். அத்துடன் மகளிருக்கான கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் உறுதியளித்தார். பரப்புரையின்போது, பாரிவேந்தருக்கு ஆதரவாக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்களும், திரண்டு சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.