Published : 24,Apr 2017 05:20 AM
சச்சின் பர்த் டே: மும்பை இண்டியன்ஸ் உற்சாகம்

சச்சின் டெண்டுல்கரின் 44 வது பிறந்த நாளை முன்னிட்டு மும்பை வாங்கடே மைதானத்தில் அவருக்கு பாராட்டு விழா நடக்கிறது.
ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் மும்பை மற்றும் புனே அணிகள் மோதுகின்றன. மும்பை வாங்கடே மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டிக்கு முன்பாக சச்சின் டெண்டுல்கரில் பிறந்த நாள் விழாவை இங்கு கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொள்கின்றனர். தொடர்ந்து ஆறு போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மும்பை அணி, இன்றைய போட்டியையும் வென்று சச்சினுக்கு பிறந்த நாள் பரிசு கொடுக்க முடிவு செய்துள்ளது.