Published : 23,Mar 2019 07:23 AM

ரூ.895 கோடி சொத்து இருந்தும் கார் இல்லை: பணக்கார தெலங்கானா வேட்பாளர்!

Congress-Leader--With-Rs--895-Crore--Is-Richest-Candidate-In-Telugu-States

ரூ.895 கோடிக்கு சொத்துக்களை கொண்ட தெலங்கானா காங்கிரஸ் வேட்பாளர், தனது குடும்பத்தினருக்குச் சொந்தமாக கார் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகள், பல பகுதிகளில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களில் சொத்து விவரங்களை கூறியுள்ளனர். அந்த விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் செவ்வெல்லா (Chevella) மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர், கொண்டா விஷ்வேஸ்வர் ரெட்டி தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில், தனது குடும்ப சொத்து ரூ.895 கோடி என குறிப்பிடுள்ளார். தனது மனைவி, மகன் உள்ளிட்டோரின் குடும்ப சொத்தாக, அவர் இதை குறிப்பிட்டுள்ளார். இவ்வளவு கோடி சொத்துகள் இருந்தும் தனக்கோ தனது குடும்பத்தினருக்கோ சொந்தமாக காரோ, வேறு மோட்டார் வாகனமோ இல்லை எனத் தெரிவித்துள்ளார். ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இவர்தான் பணக்கார வேட்பாளர்!

கடந்த தேர்தலில் தெலங்கானா ராஷ்ரிய சமிதி கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இவர். கடந்த டிசம்பர் மாதம்தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர அமைச்சரும் நாராயணா குரூப் நிறுவனங்களின் தலைவருமான பி.நாராயணா, தனது குடும்ப சொத்து ரூ.667 கோடி என குறிப்பிட்டுள் ளார். ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ரூ.574 கோடி என்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகமோகன் ரெட்டி ரூ. 538 கோடி என்றும் தங்கள் குடும்ப சொத்துக்களை வேட்பு மனுவில் தெரிவித்துள்ளனர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்