[X] Close

பாஜகவில் இணையும் கவுதம் காம்பீர் - டெல்லியில் போட்டி ?

Gautam-Gambhir-likely-to-join-BJP-today--set-to-contest-Lok-Sabha-polls

முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாஜகவில் இணையவுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.


Advertisement

இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக நீண்ட காலம் விளையாடினார். கடந்த ஆண்டு டெல்லி மற்றும் ஐதராபாத் இடையே நடந்த ராஞ்சி தொடர் போட்டியோடு அனைத்து தரப்பு கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் கவுதம் தனது அரசியல் நிலைப்பாட்டை இன்று டெல்லியில் அறிவிக்கவுள்ளார்.


Advertisement

அவர் பாஜகவில் இணையவுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு புது டெல்லி நாடாளுமன்றத் தொகுதியை பாஜக ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. புல்வாமா தாக்குதலின் எதிரொலியாக அவர் பாஜகவில் இணையும் முடிவிற்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. புல்வாமா தாக்குதல் குறித்து முன்னதாக பேட்டியளித்திருந்த கவுதம், “பிரிவினைவாதிகளுடன் முதலில் பேச வேண்டும். ஆம், பாகிஸ்தானுடன் பேச வேண்டும். ஆனால் அதற்கெல்லாம் தற்போது நேரமில்லை. இது களத்தில் இறங்க வேண்டிய நேரம். முடிந்தது முடிந்துவிட்டது” பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் என ஆவேசத்துடன் தெரிவித்திருந்தார். 


Advertisement

Advertisement
[X] Close