[X] Close

"மதுரை ஆதீனம் கருத்துக்கு நாங்கள் பொறுப்பல்ல" : அமைச்சர் பாண்டியராஜன்

Minister-Pandiyarajan--answer-to-madurai-aatheenam

டிடிவி தினகரன் விரைவில் அதிமுகவில் இணைவார் என்ற மதுரை ஆதீனம் கருத்துக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று அதிமுக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.


Advertisement

அமமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விரைவில் அதிமுகவில் இணைவார் என மதுரை ஆதீனம் தெரிவித்திருந்தார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பேசிய அவர், அதிமுகவை விட்டு பிரிந்துச் சென்றவர்கள் மீண்டும் இணைவார்கள் என்றும் சமரச பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்தார். மேலும், எங்களை பொருத்தவரை நாங்கள் என்ன சொல்லுகிறோம் என்றால் நிச்சயமாக டிடிவி தினகரன் அதிமுகவில் இணைவார் என்பது உறுதியான செய்தி எனக் குறிப்பிட்டார். இதற்கு டிடிவி தினகரன் மதுரை ஆதீனம் கூறியது ஆதாரமற்றது என மறுப்பு தெரிவித்தார்.


Advertisement

இந்நிலையில் மதுரை ஆதீனம் கருத்துக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று அதிமுக அமைச்சர் பாண்டியராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார். அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் நடைபெற்றது.அதில் அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின்,எம் எல்.ஏ பலராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன் “மதுரை ஆதீனம் அதிமுக கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.மீண்டும் அதிமுகவில் டிடிவி இணைவார் என்ற  கருத்துக்கு நாங்கள் பொறுப்பல்ல” என்று தெரிவித்தார்.


Advertisement

Advertisement
[X] Close