Published : 21,Mar 2019 01:59 AM

கோவை பாஜக வேட்பாளர் பெயரை ட்விட்டரில் தெரிவித்த வானதி !

Vananthi-Srinivasan-announced-Coimbatore-BJP-Candidate

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவிக்காதபோது, அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், கோவை தொகுதி வேட்பாளரின் பெயரை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக, 5 இடங்களில் போட்டியிடுகிறது. கன்னியாகுமரி தொகுதியில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், தூத்துக்குடியில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும், சிவகங்கையில் அக்கட்சியின் தேசியச் செயலாளர் எச்.ராஜாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவர் என தகவல் வெளியானது.

 

அதேபோல், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனும் , ராமநாதபுரம் தொகுதியில் நயினார் நாகேந்திரனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாஜக மேலிடம் நேற்றிரவு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகவில்லை.

இதனிடையே கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற உழைப்போம் என அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்