Published : 23,Apr 2017 06:49 AM

ஜியோ கைவிட்டா என்ன? இருக்கவே இருக்கு பிஎஸ்என்எல்!

bsnl-special-offer

கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தொலை தொடர்பு நிறுவனங்களை ஓட ஓட விரட்டி ஆதிக்கம் செலுத்திவந்த ஜியோ நேற்றுடன் அடங்கிவிட்டது.

ஜியோவோடு போட்டி போடும் முனைப்பில் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன. ஜியோவின் இலவச சலுகை மார்ச் மாதம் 31 ஆம் தேதியுடன் நிறைவு பெற இருந்தது. ஆனால் ஏப்ரல் 22 வரை நீடித்தது. தற்போது ஜியோ வாடிக்கையாளர்களை தன்னுடன் வைத்திருக்கும் பொருட்டு டண் டணா டண் என்ற சலுகையை அறிமுகம் செய்தது.

ஜியோவின் டண் டணா டன் சலுகைக்கு போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல்-இன் ரூ.349, ரூ.339 மற்றும் ரூ.395 என்ற புதிய திட்டங்களின் படி, அதிக இணைய டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.339க்கு ரீசாஜ் செய்தால் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 2ஜிபி டேட்டாவிற்கு பதில் தினமும் 3ஜிபி டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.

ரூ.349-க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுடன் தினமும் 2 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ.395 க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் 3000 நிமிடங்களுக்கு பி.எஸ்.என்.எல் அழைப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மற்ற நெட்வொர்க்களுக்கு 1800 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால்களும் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 71 நாட்கள் ஆகும்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்