கட்டுமானத்தில் உள்ள வீடுகளுக்கான ஜிஎஸ்டியை செலுத்துவதில் ஜிஎஸ்டி கவுன்சில் புதிய சலுகையை அறிவித்துள்ளது.
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நேற்று நடைபெற்ற 34ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், அனைத்து மாநிலப் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு ஜிஎஸ்டி 12 லிருந்து 5 சதவிகிதமாகவும், குறைந்த விலை வீடுகளுக்கு ஒரு சதவிகித ஜிஎஸ்டியும் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இதனை அமல்படுத்துவது தொடர்பாக நேற்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, பழைய வரி விகிதம் அல்லது இப்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள புதிய வரி விகிதம் ஆகியவற்றில் எதை வேண்டுமானாலும் கட்டுமான நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் மற்றும் ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முன்பு தொடங்கப்படும் கட்டுமானப் பணிகளுக்கும் இந்தச் சலுகை அளிக்கப்படுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கப்படும் கட்டுமானப் பணிகளுக்கு குறைவான புதிய ஜிஎஸ்டியே நடைமுறைப்படுத்தப்படும் என வருவாய்த்துறை செயலர் பாண்டே தெரிவித்துள்ளார்.
முன்னதாக இது குறித்து கருத்து தெரிவித்திருந்த கட்டுமானத்துறை நிறுவனங்கள், வீடுகளுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைத்திருப்பது புரட்சிகரமான நடவடிக்கை என்றும் இந்த வரிக் குறைப்பு நடவடிக்கையால் விற்காமல் தேக்கநிலையில் இருக்கும் வீடுகள் விற்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருந்தன
Loading More post
இந்தியாவை பார்ப்பதற்கு இலங்கையை போலவே உள்ளது - ராகுல் காந்தி எச்சரிக்கை
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்