''இது ஃபேன்பாய் மொமண்ட்'' - விஜய் சேதுபதியை சந்தித்த கிரிக்கெட் வீரர்

''இது ஃபேன்பாய் மொமண்ட்'' - விஜய் சேதுபதியை சந்தித்த கிரிக்கெட் வீரர்
''இது ஃபேன்பாய் மொமண்ட்'' - விஜய் சேதுபதியை சந்தித்த கிரிக்கெட் வீரர்

விஜய் சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் பகிர்ந்துள்ளார்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாக்பூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவர் தமிழக வீரரான விஜய்சங்கர். யாருமே எதிர்பார்க்காத வகையில் கடைசி ஓவரை அற்புதமாக வீசி, ஆஸ்திரேலியாவிடம் இருந்து வெற்றியை பறித்தார். அந்தப் போட்டிதான் அவரின் திறமையை இதுவரை இல்லாத அளவிற்கு வெளிக் கொண்டு வந்தது. 

அந்த போட்டிக்கு பின் விஜய்சங்கர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவார் என்ற நம்பப்படும் ஒரு வீரராகவும் உள்ள விஜய் சங்கர் தற்போது ஹைதராபாத் அணிக்காக ஐபிஎல்லில் விளையாடவுள்ளார்.

தமிழகத்தின் திருநெல்வேலியில் பிறந்தாலும் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவர் நடிகர் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் விஜய் சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அதில் மக்கள் செல்வனை சந்தித்தது மகிழ்ச்சி. இது ஃபேன்பாய் மொமண்ட் என்று தெரிவித்துள்ளார். இரண்டு விஜயின் ரசிகர்களும் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com