இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டு காரின் பின்பக்கத்தில் சிக்கி 10 கிலோமீட்டர் தூரம் வரை இழுத்து சென்று ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வி.சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்த பாலமுருகன், அப்துல் மோஷின் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் நெய்வேலி நோக்கி திருமணத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நெய்வேலி பகுதியில் இருந்து விருத்தாசலம் நோக்கி ஒருவர் கார் ஓட்டி வந்துள்ளார். கார் திடிரென கட்டுபாட்டை இழந்து, இருசக்கர வாகனத்தில் நெய்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த பாலமுருகன், அப்துல் மோஷின் மீது மோதியது.
இதில் பாலமுருகன் என்பவர் படுகாயமடைந்தார். பின்னால் அமர்ந்து வந்த மோஷின் காரின் பின்பக்கத்தில் சிக்கி கொண்டுள்ளார். ஆனால் கார் ஓட்டுனர் அது தெரியாமல் காரை ஓட்டிச் சென்றுள்ளார். விபத்தில் படுகாயமடைந்த மோஷின் 10 கிலோமீட்டர் தூரம் வரை இழுத்து சென்ற கார்கூடல் கிராமத்தில் உறுப்புகள் சிதறி உயிழந்துள்ளார்.
பின்னர் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த மோஷின் காணவில்லை என ஊ.மங்கலம் போலீசார் தேடிய வந்த நிலையில் சாலையில் இழுத்து சென்றது போல் இரத்த கரையை வைத்து கார் கூடல் கிராமத்தில் உறுப்புக்கள் சிதறி சடலமாக மீட்கபட்டார். இதனையடுத்து விபத்துக்கு காரணமான காரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சினிமா காட்சி போல நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்