[X] Close

25ம் தேதி சினிமா காட்சிகள் ரத்து

Cinematic-cancellation-on-25th

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ஏப்ரல் 25 ஆம் தேதி தமிழகத்தில் திரையரங்குகளில் காலை, பிற்பகல் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

வறட்சி நிவாரணம் வழங்கவேண்டும், வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மத்திய அரசை கண்டித்து திமுக தலைமையில் வரும் 25 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற இருக்கிறது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன. தமிழ்நாடு வணிகர் சங்கத்தினரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக 25 ஆம் தேதி காலை மற்றும் பிற்பகல் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close