[X] Close

போராடும் விவசாயிகளை சந்திக்கிறார் முதலமைச்சர்

TN-CM-palanisamy-meets-farmer-Protester

டெல்லியில் போராடும் விவசாயிகளை முதலமைச்சர் பழனிசாமி நாளை சந்திக்க இருப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.


Advertisement

வறட்சி நிவாரணம், பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்து வரும் இவர்களை அரசியல் தலைவர்கள் பலர் சந்தித்து பேசியுள்ளனர். ஆனால் முதலமைச்சர் பழனிசாமி இன்னும் ஒருமுறை கூட நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தவில்லை என பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளை முதலமைச்சர் பழனிசாமி நாளை சந்திக்க இருப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். முதலமைச்சரை நேரில் சந்தித்துப் பேசிய பிறகுதான் போராட்டத்தைத் தொடர்வதா முடிப்பதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என போராட்டக்குழுத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close