[X] Close

போராட்டம் தொடருமா? முடியுமா? அய்யாக்கண்ணு சொல்வது என்ன?

Farmers-Protest-will-continue-or-not-

முதலமைச்சரைச் சந்தித்துப் பேசிய பிறகுதான் போராட்டத்தைத் தொடர்வதா அல்லது முடிப்பதா என்பது குறித்து முடிவு செய்வோம் என்று டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.


Advertisement

வறட்சி நிவாரணம், பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் 30 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசியல் தலைவர்கள் பலர் சந்தித்தாலும் அவர்களின் போராட்டம் இன்னும் ஓயவில்லை.

டெல்லியில் போராடும் விவசாயிகள் தங்களது போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டு 25-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Advertisement

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்க விவசாயிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றார். அதே சமயத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்துப் பேசிய பிறகுதான் போராட்டத்தைத் தொடர்வதா கைவிடுவதா என்று முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

முதலமைச்சர் பழனிசாமி முதல் முறையாக நாளை டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்திக்கிறார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close