ஆஸ்திரேலியாவில் உள்ள மூவி வோர்ல்ட் விளையாட்டு பூங்காவில் ரோலர் கோஸ்டரில் சிக்கிய 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
விளையாட்டு பூங்காகாவிற்கு செல்லும் அனைவரும் ரோலர் கோஸ்டரில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுவது வழக்கம். திரில்லான அனுபத்தை தரும் ரோலர் கோஸ்டர் சில சமயங்களில் ஆபத்திலும் முடிகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள மூவி வோர்ல்ட் விளையாட்டு பூங்காவில் ரோலர் கோஸ்டரில் 20 பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது சங்கிலியில் ஏற்பட்ட பிரச்னையால் ரோலர் கோஸ்டர் பாதியிலேயே நின்றுவிட்டது. இதனால் ரோலர் கோஸ்டரில் பயணம் செய்த 20 பேரும் ரோலர் கோஸ்டரின் பாதியிலேயே சிக்கிக் கொண்டனர். மீட்புக் குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரமாக ரோலர் கோஸ்டரில் சிக்கி தவித்த அவர்களை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட 20 பேருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என விளையாட்டு பூங்கா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல கடந்த ஆண்டு இதே பகுதியில் மற்றொரு பூங்காவில் நிகழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்