Published : 22,Apr 2017 05:59 AM

கமல் பாராட்டு; சத்யராஜ் நன்றி

kamal-appreciates-sathyaraj-for-taking-stand-on-bahubali-issue

சூழ்நிலையை உணர்ந்து வருத்தம் தெரிவித்ததற்காக, நடிகர் சத்யராஜுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பாகுபலி 2 படத்தில் நடித்துள்ள சத்யராஜூக்கு எதிராக கன்னட அமைப்பினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 9 வருடத்துக்கு முன் காவிரி நீர் பிரச்னை தொடர்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் கன்னடர்களை அவர் அவமதிக்கும் வகையில் சத்யராஜ் பேசியதாகவும் அவர் மன்னிப்புக் கேட்டால்தான் படத்தை கர்நாடகாவில் வெளியிடுவோம் எனவும் அந்த அமைப்புகள் கோரிக்கை வைத்தன. இதற்கிடையே நடிகர் சத்யராஜ் அதற்கு வருத்தம் தெரிவித்து வீடியோ பதிவை வெளியிட்டார். இதற்கு நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் பாராட்டுத் தெரிவித்துள்ளார். ‘சூழ்நிலையை உணர்ந்து வருத்தம் தெரிவித்ததற்கு வாழ்த்துகள் சத்யராஜ். மன்னிப்புக் கேட்கிறவன் பெரிய மனுஷன்’ என்று டிவிட்டரில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இதற்கிடையே தனக்கு பாரட்டு தெரிவித்த கமல்ஹாசனுக்கு நடிகர் சத்யராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்