[X] Close

புதுவையில் ஒரு வருஷம்தான் இருப்பேன்: கிரண்பேடி உருக்கம்

kiran-bedi-says-she-will-be-in-pondicherry-for-only-an-year

புதுச்சேரியில் ஒரு வருடம் மட்டுமே இருப்பேன், எனக்கு முழுமையாக ஒத்துழைப்பு தாருங்கள் என அதிகாரிகளிடம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் குடிமைப் பணிகள் தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனைத்து துறை செயலர்கள், துணை செயலர்கள், இயக்குநர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் கலந்துகொண்டு குடிமைப்பணி தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். விழாவில் பேசிய கிரண்பேடி, தான் இன்னும் ஒரு வருடம் மட்டுமே புதுச்சேரியில் இருப்பேன் என்றும் அதிகாரிகள் என்னையும், எனது அனுபவங்களையும் முழுமையாக பயன்படுத்துங்கள் என்றும், நான் உங்களை முன்னேற்றச் செய்வேன், அங்கீகரிக்கச் செய்வேன், சில அதிகாரிகள் தங்கள் பணிகளை சரியாக செய்வதில்லை. நான் எனது வாழ்வில் பொய்களை கூறியது இல்லை. தங்களை முன்னேற்ற எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். 13 மாதங்களில் என்னை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வில்லை என்றால் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன். தான் இருக்கும் இந்த ஒரு வருடத்திற்குள் வளமான புதுச்சேரியை உருவாக்க அதிகாரிகள் தனக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளைப் பார்த்து கும்பிட்டபடி உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து வளமான புதுச்சேரியை உருவாக்குவதற்கு கிரண்பேடியுடன் சேர்ந்து இரண்டு நிமிடம் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி, அரசியல்வாதிகள் அரசியலைப் பார்க்கட்டும், நிர்வாகிகள் நிர்வாகத்தை திறம்பட செயலாற்றட்டும். புதுச்சேரி சிறந்த யூனியன் பிரதேசமாக உருவாக வேண்டும் அதுவே தனது கனவு என்றார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close