தனக்கு இந்திய கிரிக்கெட் அணி கையெழுத்திட்டு அனுப்பிய உடைக்கு நன்றி தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சாகித் அப்ரிதி.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான சாகித் அப்ரிதி (47), சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். அவரை கவுரவிக்க இந்திய கிரிக்கெட் அணி முடிவு செய்தது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி அணிந்துகொள்ளும் 18 என்ற எண்ணைக் கொண்ட ஜெர்சியை அவருக்கு வழங்க முடிவு செய்தனர். இதில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கோலி, யுவராஜ் சிங், ஆஷிஷ் நெஹ்ரா, சுரேஷ் ரெய்னா, பும்ரா, பவன் நேகி, ஜடேஜா, புவனேஸ்வர் குமார், ரஹானே, தாவன், அஸ்வின், பயிற்சியாளர் ரவிசாஸ்த்ரி உட்பட பலர் கையெழுத்திட்டிருந்தனர். அதில், ‘உங்களுக்கு எதிராக விருப்பதுடனேயே எப்போதும் விளையாடினோம்’ என்று கோலி எழுதியிருந்தார்.
இந்த ஜெர்சி அப்ரிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை கண்டு நெகிழ்ந்த அவர், டிவிட்டரில் கோலிக்கும் இந்திய அணிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அதில், ‘சூப்பர் ஸ்டார் கோலி உங்களை மதிக்கிறேன். விரைவில் உங்களை சந்திக்கிறேன்’ என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?