[X] Close

பேஸ்புக் லவ்: மிரட்டிய மாணவருக்கு சிறை

Facebook-affair-threatened-man-arrested

ஆபாச படங்களை வெளியிடுவேன் என இளம் பெண்ணை மிரட்டிய பேஸ்புக் காதலனை, போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி பாளையங்கோட்டையை சேர்ந்தவர் ஜான் ஐசக் சீன் (20). தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.

இவருக்கும் சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி ஒருவருக்கும் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டது. பழக்கம், நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதற்காக பேஸ்புக் மூலம் ஜாதகங்களைப் பரிமாறிக்கொண்டனர். ஜோதிடரிடம் பொருத்தம் பார்த்தாராம் மாணவி. அப்போது உங்களுக்கு திருமணம் நடந்தால் குழந்தை பாக்கியம் இருக்காது என்று சொன்னாராம் ஜோதிடர். மனம் வெறுத்த அந்த மாணவி, அந்த காதலை முறித்துக்கொண்டார்.


Advertisement

இதனால் கடுப்பான ஐசக் சீன், என்னை திருமணம் செய்யாவிட்டால், உன் ஆபாசப் படங்களை பேஸ்புக்கில் வெளியிடுவேன் என்று மிரட்டினார். மனம் உடைந்த மாணவி வீட்டில், நடந்த சம்பவங்களைச் சொல்ல, அவர்கள் போலீசில் புகார் செய்தனர். பின்னர் ஐசக் சீன் கைது செய்யப்பட்டார்.

Related Tags : facebook affairaffair arrest facebook
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close