[X] Close

மக்கள் நீதி மய்ய நேர்காணலின் போது வழங்கப்பட்ட சட்டப் புத்தகம்

MNM-Optional-Petition-Interview-in-Chennai---Kamal-Hassan-Participate

மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நேர்காணல் நடைபெற்று வருகிறது.

மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் கடந்த மாதம் 28ஆம் தேதியில் இருந்து 7ஆம் தேதி வரை மனுக்கள் பெறப்பட்டன. தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து மொத்தம் 1,137 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று முதல் 5 நாட்களுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெறுகிறது. 


Advertisement

மு‌தலாவது நாளான இன்று, தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை, திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 12 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நேர்காணலில், கமல்ஹாசன், கோவை சரளா, கட்சியின் செயலாளர் அருணாச்சலம், கார்டூனிஸ்ட் மதன் ஆகியோர் கலந்துக் கொண்டு, விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் செய்தனர். 

கல்வித் தகுதி, மொழி ஆளுமை, விவாதத் திறமை, இந்திய அரசியல் சார்ந்த அறிவு, அரசியல் புரிதல் குறித்து நேர்காணலில் பங்கேற்றவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. நேர்காணலில் பங்கேற்ற அனைவருக்கும் இந்திய அரசியல் அமைப்பு சட்டப் புத்தகம் வழங்கப்பட்டது.


Advertisement

Advertisement
[X] Close