கடந்த 2014 மக்களவை தேர்தல் 9 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 அல்லது 8 கட்டங்களாக நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
16வது மக்களவை தேர்தல்
கடந்த மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு, 2014 மார்ச் 5-ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி - மே 12ம் தேதி வரை தேர்தல் 9 கட்டங்களாக நடைபெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 336 இடங்கள் வென்றது. பாஜக மட்டும் 282 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பெற்றது. காங்கிரஸ் கட்சி வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மூன்றாவது பெரிய கட்சியாக தனித்து போட்டியிட்ட அதிமுக 37 இடங்களில் வென்று அசத்தி இருந்தது. தற்போதைய பாஜக ஆட்சியின் ஆயுட்காலம் ஜூன் 3ம் தேதியுடன் முடிவடைகிறது.
இப்போது 5 நாட்கள் கூடுதலாக ஆகியுள்ள நிலையில், இதுவரை தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. ஏப்ரல் மூன்றாம் வாரம் தொடங்கி மே இரண்டாம் வாரத்துக்குள் நாடு முழுவதும் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டியுள்ளது. பல்வேறு பதற்றம் நிறைந்த தொகுதிகளைக் கொண்ட மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தலை நடத்த வேண்டியுள்ளது.
17வது மக்களவை தேர்தல்
தற்போது நடக்கவுள்ளது 17வது மக்களவை தேர்தல். கடந்த 2014 மக்களவை தேர்தல் 9 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 அல்லது 8 கட்டங்களாக நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்படலாம் என்றும், முதல் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. மொத்தமாக மக்களவை தேர்தலில் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 1.6 கோடி வாக்காளர்கள் 18 லிருந்து 19 வயதிற்கு உட்பட்டவர்கள்.
இன்று வெளியாகும் அறிவிப்பு
டெல்லியில் மாலை 5 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படுகிறது. பிற்பகலில் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதனை அடுத்து செய்தியாளர் சந்திப்பில் தேதிகள் அறிவிக்கப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும் என்பதால் அரசு புதிய அறிவிப்புகளை வெளியிட முடியாது.
மக்களவை தேர்தல் அறிவிப்புடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 அல்லது 8 கட்டங்களாக நடத்தப்படலாம் என்றும் தென்னிந்திய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. முதல் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்