[X] Close

அதிமுக - தேமுதிக கூட்டணி: இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்து?

DMDK-AIADMK-alliance-likely-to-be-announced-today

அதிமுக, தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


Advertisement

மக்களவை தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவதில் இன்னமும் இழுபறி நீடித்து வருகிறது. கூட்டணிக்கு வர தேமுதிக அதிக தொகுதிகள் கேட்பதாகவும், ஆனால் அதற்கு அதிமுக மறுப்பதால் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது. 

சென்னை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷும் கலந்துகொண்டார். இதனால், கூட்டணி அறிவிப்பு  வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் தேமுதிக நிர்வாகிகளான இளங்கோவன், அனகை முருகேசன் உள்ளிட்ட சிலர் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள துரை முருகன் இல்லத்தில் ஆலோசனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர்.


Advertisement

ஆலோசனைக்குப் பின் பேசிய துரைமுருகன், தேமுதிக நிர்வாகிகள் கூட்டணியில் சேர விரும்புவதாக தெரிவித்தனர் என்று தெரிவித்தார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த தேமுதிக நிர்வாகிகள், தனிப்பட்ட காரணங்களுக்காகவே திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்தோம் என்றும் அரசியல் காரணங்கள் இல்லை என்றும் தெரிவித்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ், மக்களவை தேர்தலில் தேமுதிக கூட்டணி நிலைப்பாடு குறித்து 2 நாளில் அறிவிப்போம் என்று தெரிவித்தார். குழப்ப நிலையிலேயே தேமுதிகவின் கூட்டணி இழுபறியாக இருந்து வந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, தேமுதிக கூட்டணி குறித்த அறிவிப்பு ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.


Advertisement

இந்நிலையில் அதிமுக, தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை போரூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறும் ஆலோசனைக்கூட்டத்தில் இரு கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags : DMDKADMKAIADMKதேமுதிகஅதிமுக

Advertisement

Advertisement
[X] Close