மக்களவைத் தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடைபெறவுள்ளது.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பி தலைமைக் அலுவலகத்தில் விண்ணப்பித்தவர்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேர்காணல் நடத்துகிறார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள இந்த நேர்காணலின்போது விருப்ப மனு அளித்தோரிடம் தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு குறித்தும் ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் இந்த நேர்காணலின்போது அந்தந்த மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருப்பதாக கூறப் படுகிறது.
வேட்பாளர்கள் தங்களுக்கான ஆதரவாளர்களையோ, பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது என்றும், அவர்களை எல்லாம் நேர்காணலின்போது அனுமதிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான நேர்காணல் நேற்று நடந்து முடிந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான நேர்காணலும் இன்றும் முடிந்ததும், நாளை காலை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும்படி அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Loading More post
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
ரூ.1.44 லட்சம் கோடி! உச்சத்திற்கு அருகே ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல்! - முழுவிவரம்
பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு வரி விதிப்பு - என்ன காரணம்? ஏன் இந்த புதிய வரி? முழு விளக்கம்
இறக்குமதியை கட்டுப்படுத்த வரி அதிகரிப்பு - தங்கம் விலை உயரப்போகிறது?
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide