தேர்தல் நேரத்தில் ஒரு கட்சி, கூட்டணி தொடர்பாக பல கட்சிகளுடன் பேசுவது இயல்புதான் என்று அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது. கூட்டணிக்கு வர தேமுதிக அதிக தொகுதிகள் கேட்பதாகவும், ஆனால் அதற்கு அதிமுக மறுப்பதால் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது. தேமுதிக நிர்வாகிகளான இளங்கோவன், அனகை முருகேசன் உள்ளிட்ட சிலர் சென்னை கோட்டூர்புரத்திலுள்ள துரை முருகன் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்குப் பின் பேசிய துரைமுருகன், தேமுதிக நிர்வாகிகள் சிலர் வீட்டிற்கு வந்து உங்களுடன் கூட்டணியில் சேர விரும்புவதாக தெரிவித்ததாக கூறினார்.
இதையடுத்து பேசிய சுதீஷ் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த துரைமுருகனும், நானும் பலமுறை சந்தித்து பேசியுள்ளோம். திமுக மற்றும் அதன் தலைமை குறித்து துரைமுருகன் என்னிடம் பலவற்றை பேசினார். அதை என்னாலும் கூற முடியும். ஆனால் அரசியல் நாகரிகம் கருதி அதை வெளிப்படுத்தமாட்டேன் என்று தெரிவித்தார். மேலும் தனிப்பட்ட காரணங்களுக்காகவே திமுக பொருளாளர் துரைமுருகனை நேற்று சந்தித்தோம் என்றும் அரசியல் காரணங்கள் இல்லை என்றும் தேமுதிக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், தேர்தல் நேரத்தில் ஒரு கட்சி, கூட்டணி தொடர்பாக பல கட்சிகளுடன் பேசுவது இயல்புதான் என்று அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, “ ஒரு கட்சி பல கட்சிகளுடன் கூட்டணி பேசத்தான் செய்யும். இதிலிருந்து தெரிகிறது திமுக எப்படிபட்ட கட்சி என்று. ஒரு கட்சி அரசியல் நாகரிகமாக பல கட்சிளிடம் பேசுவது வழக்கம். அதைவைத்து கொண்டு அநாகரிகமாக அதை வெளிப்படுத்தி அவமானப்படுத்துவதிலிருந்து திமுக எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்” எனத் தெரிவித்தார்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?