Published : 07,Mar 2019 11:30 AM

காஷ்மீர் வியாபாரிகள் மீது தாக்குதல் நடத்திய லக்னோ கும்பல்: வீடியோ பதிவு 

2-Kashmiri-Dry-Fruit-Sellers-Attacked-In-Lucknow

காஷ்மீரை சேர்ந்த வியாபாரிகள் இரண்டு பேர் லக்னோவில் வலதுசாரி அமைப்பினரால் தாக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்தப் பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதல் ஜெயிஷ்-இ-முகமது அமைப்பு நடத்தியதாக ஒப்புக்கொண்டது. இத்தாக்குதலில் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஆதில் என்பவர் தாக்கல் நடத்தியதாக தெரியவந்தது. இதனால் இந்தியா முழுவதும் உள்ள காஷ்மீர் மாணவர்கள் மற்றும் மக்கள் மீது சிறிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டு வந்தன. இதனை தடுத்து காஷ்மீர் மாணவர்கள் மற்றும் மக்களுக்கு அந்தந்த மாநிலங்கள் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு விடுத்திருந்தது.

   

இந்நிலையில் தற்போது உத்திரப்பிரதேச மாநிலத்தின் லக்னோ பகுதியில் காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த இரண்டு வியாபாரிகள் தாக்கப்பட்டுள்ளனர். லக்னோவின் டாலிகாஞ் (Daliganj)பகுதியில் நேற்று மாலை  ‘விஸ்வ ஹிந்து தல்’ (Vishwa Hindu Dal)அமைப்பை சேர்ந்தவர்கள் வியாபாரிகளை தாக்கினர். இந்தத் தாக்குதல் வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்தத் தாக்குதலுக்கு உள்ளான வியாபாரி கூறுகையில், “நாங்கள் 20 வருடமாக உத்திரப்பிரதேசத்தில் வசித்து வியாபாரம் செய்துவருகிறோம். இதுவரை ஒருமுறை கூட இந்த மாதிரியான தாக்குதல் நடத்தப்பட்டதில்லை. ஆனால் நேற்று எங்களை தாக்கியவர்கள் மிகவும் கொடூரமாக தாக்கினர். அத்துடன் அவர்கள் எங்களை ‘தீவிரவாதிகள்’ என்று சொல்லி தாக்கினார்கள்” எனத் தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்