[X] Close

அதிமுக - தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் என்ன சிக்கல் ?

AIADMK-alliance-talks-on-with-DMDK

அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிகவை கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்றைய தினமே தேமுதிக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை தேமுதிக தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. எனினும் தேமுதிக தங்கள் கூட்டணியில் இணையும் என பாஜக மற்றும் அதிமுகவை சேர்ந்த தலைவர்கள் கூறி வருகின்றனர்.


Advertisement

இதனிடையே அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளையும் பாஜகவுக்கு 5 தொகுதிகளையும் புதிய தமிழகம் கட்சி ஒரு தொகுதியும் புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதியும் என்.ஆர். காங்கிரஸுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் 25 தொகுதிகளை அதிமுக கையில் வைத்துள்ள நிலையில் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை இழுப்பறி நிலையில் உள்ளது. 


Advertisement

இந்நிலையில் அதிமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் பிரசாரக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார். இந்நிலையில் இந்த கூட்டம் தொடங்குவதற்குள் தேமுதிக உடனான தொகுதிகள் பங்கீட்டை முடிவு செய்துவிட வேண்டும் என்றும் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி தேமுதிக துணைச்செயலாளர் சுதிஷ்,  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் தமிழக அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தேமுதிகவுக்கு 4 தொகுதிகளை கொடுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாகவும், ஆனால் அந்த தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் தனித்தொகுதிகள் எனவும் கூறப்படுகிறது. 

இந்த தனித்தொகுதிகளை ஏற்க தேமுதிக தயங்குவதாலே இழுபறி நீடிப்பதாகவும் கூறப்படுகிறது. தேமுதிக 7 தொகுதிகள் கேட்பதாகவும், ஆனால் 4 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க முடியாத நிலையில் அதிமுக இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் வேறு எப்படி இந்த தொகுதி பங்கீட்டை ஈடு செய்ய முடியும் என்றே ஆலோசனையில் தேமுதிக - அதிமுக ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தேமுதிகவுக்கு வாரியத்தலைவர்கள் ஒதுக்கீடு செய்தல், அல்லது வரும் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் உள்ளிட்ட வேறு வழிகளில் தேமுதிகவை உடன்பட வைக்க முடியுமா என்று அதிமுக முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. 


Advertisement

தேமுதிக - அதிமுக கூட்டணி இன்னும் இழுபறியாக உள்ள நிலையில் சென்னையில் நடைபெறவுள்ள அதிமுக கூட்டணி பொதுக் கூட்ட மேடையில் இருந்து விஜயகாந்த், ஜிகே வாசன் ஆகியோரின் படங்கள் அகற்றப்பட்டுள்ளன.
 


Advertisement

Advertisement
[X] Close